Breaking
Sat. Nov 23rd, 2024

வவுனியா மாவட்டத்தில் தவறான முடிவெடுத்தல் காரணமாக அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுத்தல் தொடர்பிலான அறிக்கையிடலில் ஊடகங்களின் பங்கு என்னும் தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கேட்போர் கூடத்தில் குறித்த செயலமர்வு இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது தற்கொலைக்கான காரணங்கள்,கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் இச்செயற்பாடுகளில் ஊடகங்களின் வகிபங்கு தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமர்வில் பிராந்திய சுகாதார வைத்திய சேவைகள் பணிப்பாளர் பவானி பசுபதிராஜா தலைமையில் , தொற்றா நோய்ப்பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வி. சுதர்சினி, மனநல வைத்திய நிபுணர்களான எஸ். சிவதாஸ், என். யுராஜ், மற்றும் மனநல வைத்தியர் எஸ். சுதாகரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர்கள், தற்கொலையின் காரணிகள் அதனால் சமூகத்தில் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் தற்கொலைகளை தடுப்பதற்கு ஊடகங்களின் பங்கு என்ன என்பது தொடர்பிலும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இவ்வருடத்தின் ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் 23 பேர் தவறான முடிவெடுத்தமையினால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், 302 பேர் தவறான எண்ணப்பாடுகளால் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் சுமார் 30 பேர் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு தைரியமற்ற கோழைகளாக தற்கொலை செய்து கொண்டுள்ளமையும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *