பிரதான செய்திகள்

வவுனியாவில் சுற்றிவளைக்கப்பட்ட வைத்தியசாலை

வவுனியா – சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கி வந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றிவளைப்பை வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன் தலைமையில் சென்ற குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இந்த வைத்தியசாலை சில காலமாக வவுனியாவில் இயங்கி வந்த நிலையில் சுகாதாரப் பரிசோதகர்களால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளதுடன், மருந்துப் பொருட்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.லவன்,

இந்த வைத்தியசாலையானது எமது திணைக்களகத்தில் பதிவு செய்யப்படவில்லை. மருந்து வகைகள் எவ்வாறானவை என்று தெரியவில்லை.

அதன் காரணமாக மருந்துகள் அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், மருந்துகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இது குறித்து வைத்தியசாலையின் மருத்துவர் கே.கோகுல்ராஜ் கருத்து தெரிவிக்கையில்,

எனது வைத்தியசாலை கோமியோபதி வைத்திய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசாங்க வர்த்தமானியில் பெயர் இருப்பதாக குறிப்பிட்ட வைத்தியர் கிளிநொச்சி மற்றும் குருநாகல் போன்ற பகுதிகளில் தங்கள் கோமியோபதி வைத்தியசாலை இயங்கி வருவதாகவும் சட்ட நடவடிக்கைக்கு முகங்கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts

முசலி மீள்குடியேற்றத்துக்கான பிரச்சினை அடிப்படை காரணம் என்ன?அமைச்சர் றிசாத் அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்வு!

wpengine

பேஸ்புக் விளம்பரம் இந்தியாவில் வழக்கு பதிவு

wpengine

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகல்

wpengine