வவுனியாவில் இடம்பெறவிருந்த நிகழ்வினை நிகழ்வினை புறக்கணித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் நாளை மறுதினம் ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவிருந்த காணிப்பிணக்குகளுக்கு தீர்வு காணும் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கலந்துரையாடல் தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று மாலை பிரதேச செயலாளர்களை கொண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
வவுனியாவிலுள்ள நான்கு பிரதேச செயலகங்களிலிருந்த காணிப்பிணக்குகள் நீண்டகாலமாக சீர் செய்யப்படவில்லை. அத்துடன் வன இலக்கா திணைக்களத்தின் காணிகளில் மக்கள்
குடியேற்றியுள்ளதை மீட்பது தொடர்பாகவும் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலைமைகளை சீர்செய்வதற்கு ஜனாதிபதி தலைமையில் காணி பிணக்குகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று வவுனியா மாவட்ட செலயகத்தில் எதிர்வரும் 27ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணம் ஒன்றின் அடிப்படையில் இக்கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளதாக நேற்று மாலை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச செயலாளர்களின் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட சுற்றுலா விஜயமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது குடும்பத்தினருடன் நேற்று தாய்லாந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.