பிரதான செய்திகள்

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

வவுனியா – புளியங்குளம், பரிசங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கணவனும், மனைவியும் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதில், 25 வயதுடைய நந்தகுமார் மற்றும் 19 வயதுடைய கெளதமி என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, கனகராயன் குளத்தை சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும், கணவன் மனைவிக்கு அருகே சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரணம் தொடர்பான முழுமையான விசாரணைகளுக்காக சடலங்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பாம் ஒயில் இறக்குமதி தடை; பிரமிட் வில்மார் நிறுவனத்திற்கு மேலதிக இலாபம்!

Editor

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine

இலங்கையில் பூமியதிர்ச்சி 5.7 ரிச்டர்

wpengine