பிரதான செய்திகள்

வவுனியாவில் ஏ.டி.எம்.கொள்ளை சம்பவம்

வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று இரவு தன்னியக்க இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வங்கியின் முகாமையாளர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

நேற்று இரவு குறித்த தனியார் வங்கியிலுள்ள தன்னியக்கப்பணப்பரிமாற்ற இயந்திரத்தினை உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளதாகவும் எனினும் பணம் திருட்டுப் போயில்லை என்றும் முறைப்பாடு ஒன்றினை இன்று காலை வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிஸார் குறித்த வங்கியின் சி.சி.டீவி கமராவின் உதவியுடன் திருடர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பேருவளை முஸ்லிம்களை திரும்பியும், பார்க்காத ராஜித சேனாரத்ன-பியல் நிசந்த குற்றச்சாட்டு

wpengine

கோரோனா வைரஸ்க்கு மருந்து தெரிவிக்கும் விராட்கோலி

wpengine

எரிபொருள் ஒதுக்கீடு குறித்தான அரசாங்கத்தின் புதிய முடிவு!

Editor