பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்திய மைத்திரியின் மாநாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாட்டால் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நகரசபையினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டையடுத்து கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களுக்கு ஒலி பெருக்கியின் சத்தங்களைக் குறைத்து மாணவர்களின் பரீட்சைக்கு இடையூறின்றி கட்சியின் மாநாட்டை நடாத்துமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (19) காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாநாடு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் ஆரம்பிக்க நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது.

எனினும் மண்டபத்தில் ஒலி பெருக்கியின் அதிக சத்தத்தினால் அருகிலுள்ள வைசப்பிரகாசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற உயர்தரப்பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த கட்சியின் மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களிடம் பாடசாலையில் உயர்தர மாணவர்கள் பரீட்சை இடம்பெற்று வருகின்றது, எனவே ஒலி பெருக்கியின் சத்தங்களைக் குறைத்துக்கொண்டு மாநாட்டை நடாத்துமாறு நகரசபையினரால் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஒருசில மணித்தியாலத்தின் பின்னர் கட்சியின் மாநாடு முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது . இருப்பினும் மாநாட்டிற்கு வாகனங்களில் வருகைதந்த போது பரீட்சை மண்டபத்திலிருந்து வெளியே எட்டிப்பார்த்த வண்ணம் இருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான நிமால் சிறீபால, தயாசிறி ஜெயசேகர, துமிந்த திஸாநாயக்க, முன்னாள் மத்திய மாகாண ஆளுனர் சரத் ஏக்கநாயக்கா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

வடக்கையும் கிழக்கையும் ஒரு போதும் இணைக்கக்கூடாது! – கெஹெலிய

wpengine

அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மாவட்டபுரம் வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

wpengine

பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி பேஸ்புக்கில் தரவேற்றம்!

wpengine