பிரதான செய்திகள்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபையினர் பணிப்புறக்கணிப்பு

வவுனியாவில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையினர் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“வவுனியா புதிய பேருந்து நிலையம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு கீழ் இயங்குவதினால் எமக்கு பாதுகாப்பில்லை, தூர சேவை பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு அனுமதி வேண்டும், நேற்றைய தினம் தனியார் பேருந்து சங்க ஊழியர் உரிமையாளரினால் இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும், மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக அரச, தனியார் ஊழியர்கள் பருவ காலச் சீட்டுடன் வந்தும் நேரத்துக்கு செல்ல முடியாத நிலையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தனியார் பேருந்துகள் அதிகளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

அரச பணியாளர்களுக்கான கட்டாய ஓய்வூதிய வயது 65

wpengine

துமிந்தவுக்கு மரண தண்டனை! மஹிந்தவுக்கு மகிழ்ச்சி;கோட்டாவுக்கு அதிர்ச்சி.

wpengine

உலக சந்தையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து

wpengine