பிரதான செய்திகள்

வவுனியாவில் இரண்டு சடலங்கள்

வவுனியா மகாறம்பை குளம் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று காலை 10.00 மணியளவில் காயங்களுடனும், தூக்கில் தொங்கிய நிலையிலும் இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச் சம்பவம் குறித்து தெரிய வருவதாவது,
கணவனைப் பிரிந்த நிலையில் தனிமையில் வாழ்ந்து வந்த செல்வம் புஸ்பராணி என்பவர் அவரது மகளின் மகளுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் வவுனியா நெடுங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பியசேனகே எதிரிசிங்க என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

நேற்றையதினம் மாலை இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக தொலைக்காட்சியின் சத்தத்தை அதிகரித்து விட்டு இருவரும் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் குறித்த பெண் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாகக் காணப்பட்டதுடன் குறித்த நபரும் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
இதனை அவதானித்த குறித்த பெண்ணின் பேத்தி அயலவர்களுக்கு தெரிவித்ததையடுத்து அயலவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தடவியற் பொலிஸாருடன் இணைந்து மகாறம்பைக்குளம் காவலரண் பொலிஸார் வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முஸ்லிம்கள் வில்பத்து காட்டை அழிக்கின்றார்கள்! இனவாதிகள் பழிபோடுவதற்கு நம்மவர்களிடையே உள்ள கூட்டமே.

wpengine

ஜப்பான் மூழ்கடிக்கப்படும்! அமெரிக்கா சாம்பலாக்கப்படும் வட கொரியாவின் வாய்போர்

wpengine

மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக சிப்லி பாரூக் நியமனம்

wpengine