பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் “இடியன்”துப்பாக்கியுடன் இளைஞன் கைது

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

புளியங்குளம் விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை வயல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற இளைஞனிடம் சோதனை மேற்கொண்ட போது குறித்த இளைஞனிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கியையும் (இடியன் துப்பாக்கி) இளைஞனையும் கைது செய்த விஷேட அதிரடி படையினர் ஓமந்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞன் பாலமோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

முன்னாள் அமைச்சர் சுரநிமல ராஜபக்ஸ காலமானார்.

wpengine

தீவிரவாத இயக்கங்கள் உருவாவதற்கு நாமும் ஒர் வகையில் காரணம்

wpengine

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு இலங்கை 10ஆவது

wpengine