செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் இடம்பெயர்ந்து குடியேறிய வறுமைப்பட்ட குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு நிர்மாணித்து கையளிக்கப்பட்டது .

வவுனியாவின் அடம்பகஸ்கட பகுதியில் போரினால் இடம்பெயர்ந்து தற்காலிகமாக குடியேறிய நிதி நெருக்கடியில் உள்ள ஒரு குடும்பத்திற்கு இராணுவத்தினரால் நிரந்தர வீடு நிர்மாணிம் செய்யப்பட்டு, இன்றைய தினம் இராணுவத் தளபதி லெப்டினட் ஜெனரல் லசந்த ரொட்ரிக் அவர்களினால் கையளிக்கப்படுள்ளது.

வவுனியாவின் அடம்பகஸ்கட பகுதியில் கட்டப்பட்ட இந்த வீட்டின் மதிப்பு 4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் .

வவுனியாவில் உள்ள அட்டம்பகஸ்கட ஸ்ரீ சுதர்மாராமய விகாரையின் பிரதம விகாராதிபதி அட்டம்பகஸ்கட கல்யாணதிஸ்ஸ தேரரின் வேண்டுகோளின் பேரில், இந்த வீடு சிவில் பாதுகாப்புப் படையின் உதவியுடன் இராணுவத்தால் கட்டப்பட்டது.

இரண்டு குழந்தைகளைக் கொண்ட சுரேஷ் குமாருக்கு இந்த வீடு பரிசாக வழங்கப்பட்டுள்ளது .

இந்த நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பல உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

பொது பல சேனாவின் ஜம்மியத்துல் உலமாவிற்கான கேள்வி கணைகள்

wpengine

மாந்தை கிராம சேவையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்!

wpengine

பிரபாகரன் கொலை செய்ய, சலுகைக்காக முஸ்லிம்கள் கையேந்துகிறார்கள்.

wpengine