பிரதான செய்திகள்

வவுனியா,தாண்டிக்குளம் பகுதியில் பதற்ற நிலை

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளொன்றினை நேற்று போக்குவரத்து பொலிஸார் எடுத்துச் சென்றமையினால் அப்பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா நகர்ப்பகுதியில் இருந்து தாண்டிக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவரை போக்குவரத்து பொலிஸார் மறித்துள்ளனர்.

குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளார். இளைஞனை பின்தொடர்ந்த பொலிஸார் வீட்டிற்குள் சென்று இளைஞனை தாக்கியதுடன் இழுத்து வரவும் முற்பட்டுள்ளனர்.

எனினும், இளைஞனின் தந்தை மற்றும் உறவினர் அவரை விடாமையினால் அங்கு பெருமளவில் சீருடையில் குவிந்த போக்குவரத்து பொலிஸார் குடும்பத்தினருடன் இளைஞனை வெளியில் விடுமாறு கோரியுள்ளனர்.

இந் நிலையில் இளைஞன் வெளியில் வராததால் வீட்டு வளவினுள் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கொண்டுச் சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன் சிவில் உடையிலும் பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புகைப்படம் மற்றும் காணொளி எடுத்த இளைஞர்களை அழைத்து விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

வட மாகாண சபையின் புதிய உறுப்பினர் இ.ஜெயசேகரம்

wpengine

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

wpengine

ஈஸ்டர் தாக்குதல்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்!

Editor