பிராந்திய செய்திவவுனியா

வவுனியாவில் பேருந்தில் மோதி ஏழு வயது சிறுவன் பலி!

வவுனியா – பாவற்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் 07 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று மாலை (31.12.2024) இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி பேரூந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேரூந்தை செலுத்திய போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரு சிறுவர்கள் வீதியை ஊடறுக்க முற்பட்ட போது பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

யாழில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு – உயர்தர பரீட்சையின் பின் விபரீத முடிவு
யாழில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு – உயர்தர பரீட்சையின் பின் விபரீத முடிவு
மேலதிக விசாரணை
இதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த 07 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் உளுக்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

இதேவேளை, வவுனியா, ஏ9 வீதியில் இராணுவத்தின் பேரூந்து மற்றும் முச்சக்கர வண்டி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, ஏ9 வீதி ஊடாக அனுராதபுரம் நோக்கி பயணித்த இராணுவத்தினரின் பேரூந்து ஒன்று மூன்றுமுறிப்பு பகுதியில் பயணித்த தனியார் பேரூந்து ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வவுனியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கொவிட் கொத்தணி!

Editor

நுண்நிதி கடனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Editor

முல்லைத்தீவு மாவட்ட பயிர்ச்செய்கை நெல் கொள்வனவு கலந்துரையாடல்

wpengine