உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

வளைகுடா நாடுகளுக்கு கடத்த இருந்த அரிய வகை  கடல் அட்டை உயிருடன் பறிமுதல்

(செய்தியாளர் ஆ.பிரபுராவ் இராமேஸ்வரம்)
ராமேஸ்வரம் ஆக 11 ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் தடை செய்யப்பட்ட  கடல் அட்டைகளை உயிருடன் பறிமுதல் செய்து மண்டபம் மெரைன் பொலிஸார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்டபம் மற்றும் வேதாளைப்பகுதிகளில் அரியவகை கடல் அட்டைகள் கடத்தப்பட்டு வருவதாக மெரைன் போலீஸ்ஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மன்னார் வளைகுடா கடலோரப் பகுதிகளில் மெரைன் போலீஸ்ஸார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது    மண்டபம் கடற்கரை சாலையில் வாகன சோதனையில் சந்தேகத்திற்க்கு இடமான ஆட்டோ ஒன்று பிடிப்பட்டது அந்த ஆட்டோவில்; மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ எடை கொண்ட  தடை செய்யப்பட்ட உயிருடன்   கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.

 மேலும் கடத்தலில் ஈடுபட்ட மண்டபம் பகுதியை  சேர்ந்த அப்பாஸ் என்ற நபரை கைது செய்த மெரைன் போலீஸ்ஸார் மண்டபம் மெரைன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டையின் மதிப்பு சுமார் முப்பது லட்சம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

Related posts

பேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் வசதி

wpengine

அழகு நிலையத்தில் மயங்கிய நிலையில் ஆண் ஒருவர் மற்றும் 6 இளம் பெண்கள்.

Maash

இன ,மத மொழி பேதங்களைக் கடந்து சேவை செய்கின்றார் வட மாகாண ஆளுநர்

wpengine