பிரதான செய்திகள்

வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை

இலங்கை விமானப்படை தளபதியின் மனைவி செயற்பாடு காரணமாக சர்ச்சைக்குரிய நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படையினால் நடத்தப்படும் சிங்கள – தமிழ் புத்தாண்டு நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

விமானப்படை எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தலைமையில் விமானப்படை தலைமையகத்தில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு, உடை மற்றும் புத்தாண்டிற்கு அவசியமான பொருட்களை அந்த இடத்தில் காண முடிந்தது.

இந்நிலையில் விமானப்படையினால் காபனிக் உரம் பயன்படுத்தி பயிரப்பட்ட மரக்கறிகள் இங்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் தளபதியின் மனைவி அனோமா ஜயம்பதியும் அங்கு வருகைத்தந்திருந்தார். அவர் பின்னால் சென்ற விமானப்படை அதிகாரி ஒருவர், அவர் மீது வெயில் படாதவாறு குடை பிடித்து சென்றுள்ளார்.

இதன் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள் அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்ய வேண்டும்

wpengine

றிஷாட் தலைமையிலான மக்கள் சக்தி கூட்டணி வேட்புமனு தாக்கல்

wpengine

எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

Editor