பிரதான செய்திகள்

வலி.தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் பதவி பரிபோனது

யாழ்ப்பாணம், வலி. தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர் தி.பிரகாசின் உறுப்புரிமை செல்லுபடியற்றது என தேர்தல்கள் செயலகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் உறுதிப்படுத்தியது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் வலி. தெற்கு பிரதேச சபையின் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தி.பிரகாஸ் கட்சியின் முடிவினை மீறிச் செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி சபை உறுப்பினர் பதவியினை வெறிதாக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், தனது உறுப்பினர் பதவியை நீக்குகின்றமை சட்ட முரணானது என கட்சியின் முடிவினை எதிர்த்து சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தேர்தல் செயலகம் கட்சியின் முடிவின் பிரகாரம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் பிரகாரம் வலி. தெற்கு பிரதேச சபையின் உறுப்பினராக தேர்வான பிரகாசின் பதவி வெறிதாக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கட்டாரில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு சிக்கல்

wpengine

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். கொலை செய்து கடலில் போட்டனர்.

wpengine

நிர்வாண போட்டோவை சமூகவலை தளத்தில் வெளியிட்டவர் கைது.

wpengine