பிரதான செய்திகள்

வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டம்

வற் வரிக்கு எதிராக நாட்டின் பல இடங்களிலும் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.

 

இதனடிப்படையில் கடவத்தை, களனி, அனுராதபுரம், பதுளை, பண்டாரவளை, கிரிபத்கொடை மற்றும் கட்டுகஸ்தோட்டை போன்ற நகரங்களின் பெருந்தொகையான கடை உரிமையாளர்கள் கடையடைப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுனர்.

இதனால் அப்பகுதியில் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடை உரிமையாளர்களின் தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி கிரிபத்கொடை பகுதியில் தற்போது ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

வற் வரி  அதிகரிப்பினை தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் வற் வரிக்கெதிரான போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

WhatApp யில் புதிய விடயம்! பாவிப்போர் கவனம் செலுத்தவும்.

wpengine

மாற்று மதத்தினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை

wpengine

கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி சட்டத்திற்குட்பட்டதா?- பகுதி-3

wpengine