பிரதான செய்திகள்

வறிய குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கி வைத்தார்- டெனீஸ்வரன்

(அமைச்சரின் முகநுால்)

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து மிகவும் வறிய, வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பங்களுக்கு அவர்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுடைய விண்ணப்பத்தின் அடிப்படையில் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக, துவிச்சக்கர வண்டிகள் மற்றும் தையல் இயந்திரங்கள் போன்றவற்றை சுமார் 08 பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு 26-02-2016 வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் கௌரவ அமைச்சர் அவர்களும், வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க தலைவர் ராஜேஸ்வரன் ரஞ்சன், மற்றும், வட மாகாண தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பொருளாளர் தர்மலிங்கம் ரமேஷ் என்பவர்களும் கலந்து சிறப்பித்தனர்.12524284_10208575430372366_9158683471661848955_n

Related posts

அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கம் கோரிய உலமா சபை

wpengine

காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராகிறார் சல்மான் கான்

wpengine

வவுனியாவில் கோர விபத்து

wpengine