(அனா)
வில்பத்துக் காணிக்கு அரசாங்கம்; செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி 02ம் வட்டாரக் கிளை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு கல்குடா ஜம்யதுல் உலமா சபை கேட்போர் கூடத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்
வில்பத்துக் காணிக்கு ஜனாதிபதியினால் செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்படவில்லை என்றால் நாங்களும் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்ற விடயத்தை ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாக தெரிவித்திருக்கின்றது.
கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று சிறுபான்மை சமூகம் சொன்ன பொழுது நாங்கள் நல்லாட்சியை கொண்டுவர வேண்டும் என்று முதன் முதலில் களம் இறங்கி அதில் வெற்றி கண்டவர்கள் ஆனால் தபால் வாக்களிப்புக்கு பின்புதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் சொன்னார்கள் மனச்சாட்சியின் படி வாக்களியுங்கள் என்று நாங்கள் தைரியமாக வெளியேறி இந்த அரசசை கொண்டு வருதற்கு முக்கிய ஊண்றுகோளாக அமைந்திருக்கின்றோம்.
பெருன்பான்மை சமூகங்களுக்கு சொல்லி உசுபேத்துவதற்காக நான் இங்கு இந்த விடயத்தை சொல்லவில்லை வில்பத்துக் காணி விடயத்தில் இழுத்தடிப்பு செய்து அல்லது நகர்த்தல் செய்தால் இதற்கு கடுமையான விலைவை அனுபவிக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சொல்லிக் கொள்ள வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் பிரதேச அபிவிருத்திக்கு அதிக பங்காற்றிவரும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரி அஸ்மியியை பாராட்டி பிரதி அமைச்சரினால் பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்துவ படிவங்களும் வழங்கி வைக்கப்பட்டன.