பிரதான செய்திகள்

வர்த்தக தடைக்கு எதிராக! கட்டார் உலக வர்த்தக அமைப்பிடம் முறைப்பாடு

சவுதி அரேபியா உட்பட அரபு நாடுகளினால் விதிக்கப்பட்டுள்ள வர்த்தகத் தடைக்கு எதிராக கட்டார் அரசாங்கம் உலக வர்த்தக அமைப்பிடம் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்துள்ளது.

பிராந்திய அரபு நாடுகளினால் தங்கள் நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடையானது சர்வதேச பொருளாதாரத்தை மீறும் ஒரு செயல் என உறுதியாகியுள்ளதாக கட்டார் பொருளியல் மற்றும் வணிகவியல் அமைச்சர் ஷேக் அஹமட் பின் ஜசேம் பின் மொஹமட் அல் தானி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக சவுதி அரேபியா, பஹ்ரேன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த 60 நாட்களுக்குள் இணக்கப்பாட்டிற்கு வரவில்லை என்றால் உலக வர்த்தக நிறுவனத்தினால் அதற்காக விசேட சபை நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த உத்தியோகபூர்வ முறைப்பாடு தொடர்பில் சவுதி உட்பட ஏனைய நாடுகள் இதுவரையில் பதிலளிக்காத போதிலும், அந்தத் தடை தங்கள் நாட்டு பாதுகாப்பு விடயத்துடன் எடுத்து கொண்டால் நியாயமான தீர்மானமே என அந்த நாடுகளினால் இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

Related posts

உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜோசப்பின் மணி விழா

wpengine

முசலி மண் மீட்பு போராட்டம்! மூக்கை நுழைத்து மொட்டைத் தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சுப் போட வேண்டாம் -அலிகான்

wpengine

ஜனாதிபதி அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு

wpengine