2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முன்னுரிமையளிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் குறைந்த வருமானம் பெறும் மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தி, அவர்களது வசதி வாய்ப்புகளை முன்னேற்றுகின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமையளித்தது.
இதற்கமைய, வறுமையினால் பாதிக்கப்பட்ட கிராம மக்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதை தற்போதைய அரசாங்கம் முக்கிய பணியாக மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.