Breaking
Mon. Nov 25th, 2024

எதிர்வரும் ஜுன் மாதம் இறுதியில் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து ஆட் பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பாவனையில் இருந்து வந்த தேசிய அடையாள அட்டைகை்குப் பதிலாக இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை பாவனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் நபருடைய புகைப்படம், சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் இரத்த வகை ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன.

15 வயதிற்கு மேற்பட்ட தனி நபருடைய அனைத்து தனிப்பட்ட தரவுகளையும் அவரது குடும்ப விபரங்களையும் திரட்டி ஒரு தேசிய பதிவேட்டின் மூலம் மத்திய தகவல் நிறுவனத்தில் பேணுவதற்கு எண்ணியுள்ளோம்.

இதேவேளை,  பையோ மெட்ரிக்ஸ் மற்றும் புகைப்படங்களை சர்வதேச சிவில் விமான போக்குவரத்து அமைப்பின் தரத்திற்கு ஏற்ப பெறுவதற்கு தீர்மானித்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் எதிர்வரும் ஜுன் மாத இறுதிக்குள் நிறைவடையும்.

இதேவேளை, சர்வதேச தரத்திற்கு ஒத்துப்போகும் வகையில் குறித்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையின் தரம் அமையவுள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *