எமது பாராளுமன்ற வரலாறு அவ்வளவு மோசமானதன்று. பாராளுமன்ற உறுப்பினர்களை கீழே போட்டு அடித்துக் காயப்படுத்தும் அளவுக்கு எமது கடந்த காலத்தில் இருந்தவர்கள் பாதகமானவர்கள் அல்லர் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இரத்தம் சிந்தப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்காக நாம் வெட்கப்பட வேண்டும். இந்த சம்பவம் இடம்பெறும் பொழுது பாடசாலை மாணவர்களும் பார்த்துக் கொண்டிருந்தனர். பாராளுமன்றம் என்பது மக்களுக்காக கொள்கை வகுக்கும் இடமாகும்.
தெருப் பொறுக்கியையும், கஞ்சாக் காரர்களையும், மதுபானம் வடிப்பவர்களையும் கொண்ட ஒரு சபையல்ல பாராளுமன்றம் என்பது. இது தொடர்பில் சபாநாயகர் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார் எனவும் நேற்று (4) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.