பிரதான செய்திகள்

வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை அமைச்சர் றிஷாட்

(ஊடகப்பிரிவு)
உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்ற ஸ்லோவாகியா தனது றப்பர் வர்த்தக செயற்பாட்டினை இலங்கையுடன் விரிவுப்படுத்தவுள்ளது என ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விஷேட அழைப்பின் பேரில், கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத் தலைமைக் காரியாலயத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, ஸ்லோவாகியா நிதி அமைச்சர் பீட்டர் கசிமீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இக்கலந்துரையாடலில் தொடந்து கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் றப்பர் உட்கொள்ளலை விரிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம், அத்துடன் தற்போதைய எமது ஆபிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய வழங்குனர்களிடமிருந்து வளங்களை விரிவாக்கவும் விரும்புகிறோம்.

சோவியத்தின் பிந்தைய பொருளாதார மறுசீரமைப்பின் காரணமாக, ஸ்லோவாக்கியா ஒரு உற்பத்தி பொருளாதார நாடாகியது.
எங்கள் தொழில்துறை ஏற்றுமதியில் 40 சதவீதம் வாகன ஏற்றுமதியாகும். KIA, Volkswagen, Jaguar Landrover, Audi, and PSA Peugeot Citroen போன்ற உலகளாவிய பிராண்டுகள் இப்போது Tier One OEM மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 400 க்கும் மேற்பட்ட ஸ்லோவாக்கிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையினர் எமது வழங்குநர் சங்கிலியின் ஒரு பகுதியினர். எங்கள் வாகன உற்பத்தித் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது, கடந்த ஆண்டுகளாக நாங்கள் உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக திகழ்கின்றோம். இதன் விளைவாக, நாங்கள் இப்போது எங்கள் தொழில்துறை விநியோக மூலங்களை வேறுபடுத்தி செயலாற்றி வருகின்கிறோம்.

உதாரணமாக, நமது றப்பர் உட்கொள்ளலை விரிவுபடுத்துவதற்கும், தற்போது நம் ஆபிரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசிய வழங்குனர்களிடமிருந்து வளங்களை விரிவுபடுத்துவதற்கும் நாம் விரும்புகிறோம். டயர் பொருட்கள் விநியோகம் எங்களுக்கு முக்கியமானது. இலங்கை றப்பர் துறையோடு விரிவுபடுத்துவதோடு, குறிப்பாக டயர்களையும் கவனத்தில் கொள்கிறோம். எமது வர்த்தக பிரதிநிதிகளை இங்கு அனுப்பவும், இலங்கையில் (வாகனத் தொழிற்துறையினருக்கு) கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு விரும்பினால், எமது தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கு மாற்றவும் தயாராக இருக்கிறோம்.

இலங்கையிலிருந்து ஸ்லோவாக்கியாவிற்கு வரும் புதிய விநியோகங்கள், தற்போதுள்ள குறைந்த மட்ட இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும் முடியும் என்றார்.

இக்கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்,

எமது றப்பர், டயர்கள் மற்றும் வாகனத் துறைக்கு தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு ஸ்லோவாகியா நாட்டின் ஆர்வத்தை நான் வரவேற்கிறேன். இந்த நடவடிக்கைகள் எமது உற்பத்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக, வரலாற்றில் உலகிற்கே இயற்கை றப்பர் வழங்குனராக இலங்கை திகழ்வது என்பது இலங்கைக்கு ஒரு மரியாதை ஆகும். வரலாற்றுப் புகழாக காணப்பட்ட இயற்கை றப்பர் தவிர இந்தத் துறையை அதிகரிக்க சமூக பொருளாதாரமும், ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. இலங்கை 06 வது பெரிய ஏற்றுமதியாளராகவும் மற்றும் 8 வது இயற்கை றப்பர் உற்பத்தி நாடாகவும் உள்ளது என்றார்.

Related posts

ஷிப்லி பாறுக்கின் மேற்பார்வையின் கீழ் காத்தான்குடி வீதி வேகக் கட்டுப்பாட்டுத் தடைகள்

wpengine

முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

wpengine

மோடி இலங்கை முஸ்லிம்களுடன் மோத போகுறாரா?

wpengine