பிரதான செய்திகள்

வரலாற்றின் முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் கூடிய பாராளுமன்றக் குழு!

வரலாற்றில் முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றக் குழு இன்று (13) எதிர்க்கட்சித் தலைவர். சஜித் பிரேமதாச தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.மேற்படி குழுவின் ஊடாக, பல்வேறு துறைகளின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு, ஊழல் மற்றும் மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல், முன்மாதிரியான நிர்வாகத்திற்கான ஏற்பாடுகள் மற்றும் ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம், சிவில் உரிமைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் சங்கம், சுகாதார நிபுணர்கள் நிறுவனம் போன்றவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழு ஒன்று கலந்துகொண்டது.இதன் நோக்கம் வெறும் அரசியல் நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்துவது மாத்திரமல்ல, நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது!

Related posts

வெளிநாடு செல்ல பணம் இல்லாமையினால் தூக்கிட்டு மரணமான யாழ். இலைஞன்.

Maash

பதவி விலக தயார்! சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் ஜனாதிபதி

wpengine

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்! ஆளுநர் நடவடிக்கை

wpengine