Breaking
Thu. Nov 21st, 2024

அஸ்லம் (வவுனியா)

முல்லைத்திவு,மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களின் சமூர்த்தி தொடர்பான மீளாய்வு கூட்டம் நேற்று காலை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக சமூக வலுவூட்டல்கள் மற்றும் நலனோம்புகை அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க கலந்துகொண்டதுடன், வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவருமான காதர் மஸ்தானும் கலந்துகொண்டார்.

இதில் வன்னி பிரதேசத்தில் உள்ள சமூர்த்தி தொடர்பான மக்களின் முக்கியமான விடயங்கள் பேசப்பட்டன  முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்;

சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இதுவரைக்கும் சமூர்த்தி கிடைக்காமல் பல பயனாளிகள் மிகவும் கஷ்டத்தில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் இவர்களுடைய வாழ்வாதாரத்தை மேலும் விருத்தி செய்து கொள்ள இன்னும் சமூர்த்தி தேவையாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

அத்துடன் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டத்திலும் இன்னும் சமூர்த்தி பெறமால் பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர்கள் என்றும் உரிய அதிகாரிகள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சொன்றுள்ளதாக தெரிய வருகின்றது.

ஏனைய மாவட்டத்தினை விட மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்திவு மாவட்டங்கள் 30% விதமாக மக்கள் தான் சமூர்த்தியினை பெறுகின்றார் இன்னும் மீதியாக 70% விதமான மக்கள் சமூர்த்தி பெற தகுதி இருந்தும் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் சமூர்த்தி கிடைக்காமல் மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகின்றார்கள் என்றும் தெரிய வருகின்றது.

கூட்டத்திற்கு சென்ற அதிகாரிகள் தெரிவிக்கையில்;

வன்னி பிரதேசத்தில் உள்ள ஏழை மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வாய்மூடி மௌனியாக இருந்து இருக்கின்றார் என்றும், வன்னியில் இன்னும் 70விதமான மக்கள் சமுர்த்தி பெறாமல் இருக்கின்ற போது மாவட்ட அரசாங்க அதிபர்கள்,உத்தியோகத்தர்கள் மக்களின் தேவை பற்றி பேசினாலும் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் 70வித தேவை பற்றி அமைச்சரிடம் கோரிக்கையினை முன் வைக்காமல் இருப்பதை பார்க்கின்ற போது  வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமாக பார்க்கபடுகின்றது என்றும் தெரிவிக்கின்றனர்.f5508cf3-c544-4fe6-bd38-b84dad92c5b82f9ea02d-5153-4da0-bffe-db68e348f36f7fa36d26-dbbd-4985-ab6b-431519f55636

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *