பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை நிராகரித்த அமைச்சர் ஹக்கீம்,ஹூனைஸ்

(ஏ.எம்.அக்ரம்)

வில்பத்து பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க போவதாக தெரிவித்துக்கொண்டு நேற்று (27) காலை மன்னார்-முசலி பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்து இந்த கூட்டத்திற்கு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானை அழைக்கவில்லை என முசலி பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில்;

கடந்த சில காலமாக மறிச்சுக்கட்டி மக்களின் வில்பத்து வர்த்தகமானி அறிவித்தல் விடயத்தில் சில முன்னேடுப்புகளை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானை ஏன்?  முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வன்னியின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்கும் அழைக்கவில்லை என்ற கேள்வியினை பிரதேச மக்கள் கேட்கின்றார்கள்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதியின் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் இவர் எனவும் அறியமுடிகின்றது.

அதே போன்று மறிச்சுக்கட்டி மக்களின் பிரச்சினையினை தீர்த்து வைக்க ஜனாதிபதியினை செயலாளரை அழைத்து வருவதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்த போதும் அவரை அழைத்துவரவில்லை எனவும் தெரிவிக்கின்றார்கள்.

Related posts

திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் மு.கா உயர்பீட உறுப்பினர்கள் றியாழும், இஸ்மாயில் ஹாஜியும்.

wpengine

மிஸ்டர் கிளீன் என அழைக்கப்பட்ட ரணில் மிஸ்டர் டேர்ட்டியாகி விட்டார்-மஹிந்தானந்த அலுத்கமகே

wpengine

இலஞ்சம் பெற்ற தொழிநுட்ப அதிகாரி கைது

wpengine