தேர்தல் காலங்களில் மாத்திரம் வன்னிக்கு விருந்தாளி போன்று வந்து செல்லும் ரவுப் ஹக்கீம் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மீண்டும் இன்று வன்னிக்கு தனது விஜயத்தை மேற்கொண்டார். முஸ்லிம்களின் சமூகக்கட்சியாக மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் 1989 தொடக்கம் வன்னியிலே பிரதிநிதித்துவத்தை தக்க வைத்த மாவட்டம் ஆனால் கடந்த பாராளுமன்ற பொதுத்தேர்தலில் வன்னியிலே முஸ்லிம் காங்கிரஸ் தனது பிரதிநிதித்துவத்தை இழந்தது. இதற்கு முழுப்பொறுப்பையும் கட்சியின் தலைவரே ஏற்க வேண்டும்.
கட்சிக்கு காலாகாலம் பிரதிநிதித்துவத்தை வழங்கிய மக்களை மடயர்களாக்கி தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து பொய் வாக்குருதிகளை வழங்கிச் செல்வதோடு வன்னி மக்களை ஏரெடுத்தும் பார்க்காத தலைதமையையும் முஸ்லிம் காங்கிரசையும் வன்னி மக்கள் புறக்கனித்தமை வரலாற்றுச் சான்று.
இன்றைய விஜயமும் தேர்தல் ஒன்றை முன்னிறுத்தியே சாணக்கியம் தனது ஏமாற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில் வேடிக்கை என்னவென்றால் சீசனுக்கு மாத்திரம் வந்து போகும் ஹக்கீமின் கூட்டத்துக்கு பாவற்குளத்தில் 10 அல்லது 12 பேரே கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறே இன்றைய இவரது சகல கூட்டங்களிலும் கிழக்கில் இருந்து சென்ற ஆட்களை வைத்தே கூட்டங்கள் நடத்தி மூக்குடைபட்டுள்ளார் சாணக்கியம்.
அதுமட்டுமல்லாது சிலாவத்துறையில் பல இலட்சம் ரூபா செலவில் மேடை அமைத்து பல இடங்களுக்கு பணத்துடன் பஸ் வண்டிகளையும் அனுப்பி ஆட்கள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் மின்னல் ரங்காவின் நெருங்கிய நண்பருமான ஹுனைஸ் பாருக்கும் ஆட்கள் வராமல் மூக்குடைபட்ட சம்மபவம் சிலாவத்துறையில் இடம்பெற்றுள்ளது. முசலியிலே உள்ள மக்கள் ஓரிரவரே இந்தக்கூட்டத்துக்கு சென்றுள்ளனர் அத்தோடு புதினம் பார்ப்பதற்கு சென்ற ஓரிருவருமே ஏனையவர்கள் வெளியில் இருந்து சென்ற மக்களை வைத்தே இன்றைய கூட்டம் நடைபெற்றுள்ளது. முசலி மக்கள் பல துன்பங்களை அனுபத்த போதும் இனவாதிகள் பல கஷ்டங்களை கொடுத்த போதும் வாய் திறந்து கூட பேசாத ஹக்கீமுக்கும் அவரை அழைத்து வந்த ஹுனைஸ் பாருக் இற்கும் முசலி மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர்.
அகதி முகாமில் இருந்த காலத்திலும் எந்த உதவியும் செய்யாத ரவுப் இந்த ரவுப் ஹக்கீம.; பல இன்னல்களுக்கு மத்தியில் அமைச்சர் றிசாதின் முயற்சியினால் கொஞ்ஞம் கொஞ்ஞமாக மீள்குடியேறிய மக்களை சுகம் விசாரிக்கக் கூட வராதவர்தான் இந்த ஹக்கீம். இன்று மேடைபோட்டு வாக்குறுதிகளை வழங்கினால் அடுத்த தேர்தலுக்குதான் ஆளைப்பிடிக்கலாம்.
முசலியிலே வீடு, வீதி, தொழில்வாய்ப்புக்கள், பாடசாலை, பள்ளிவாசல், கிணருகள், குளங்கள், பொது கட்டிடங்கள் உட்கட்டமைப்பு வசதி என்று அனைத்துமே அமைச்சர் றிஷாட் என்றே சாட்சி சொல்லும். ரவுப் ஹக்கீம் அவர்களால் முசலி மக்களுக்கு தான் செய்த சேவையை பெயர் சொல்லிக்கூற முடியுமா?
மேலும் இன்று வவுனியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் மஸ்தான் எம்.பி யை தனது கட்சிக்கு வருமாறு கெஞ்சியிருக்கின்றார். மஸ்தான் எம்.பி யை அமைச்சர் றிசாட் அழைப்பதாக வதந்திகள் பரவிய போது வவுனியாவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அமைச்சர் றிஷாட் கூறியதாவது மஸ்தனை நான் அழைக்கவுமில்லை அழைக்கவும் மாட்டேன் என்றும் மஸ்தான் எம்.பி சுதந்திரக்கட்சியில் இருப்பதே எமது சமூகத்துக்கு சிறந்தது என்று சமூக அக்கறையோடு குறிப்பிட்டார்.
இனிவரும் காலங்களிலாவது அமைச்சர் ரவுப் ஹக்கீம் அவர்கள் பொய் வாக்குறுதிகளை வழங்குவதை நிறுத்தி வன்னி மக்களுக்கு சேவை செய்வாறா? அல்லது அடுத்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்குத்தான் வன்னிக்கு விஜயம் செய்வாரா? மக்ளே அவதானம் பஷீர் சேகுதாவுத் அவர்களும் ஏதேதோ சொல்கின்றார் அல்லாஹ்வே அறிவான்.