Breaking
Sat. Nov 23rd, 2024

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக போட்டியிடவுள்ள இறுதி செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளன.


பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் தமிழரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கலந்துரையாடல் கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.


இதன்போதே இவ் வேட்பாளர்கள் தொடர்பிலான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.


எவ்வாறு இருப்பினும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் யாழ்ப்பாணம், வன்னி ஆகிய மாவட்டங்களிற்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யபட்டுள்ள போதிலும் கிழக்கு மாகாணத்திற்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதில் இழுபறிநிலை காணப்படுவதாகவும் கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதன் அடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், ஈ.சரவணபவன் உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், அம்பிகா சற்குணநாதன், தபேந்திரன் உள்ளிட்ட எட்டு வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


அதே வேளையில் வன்னி மாவட்டத்திலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறீஸ்காந்தராஜா, சி.சிவமோகன் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.


கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டதில் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், துரைரட்ணம், குகதாசன், சரா.புவனேஸ்வரன் உள்ளிட்ட நான்கு வேட்பாளர்கள் களமிறக்கப்படவுள்ளனர்.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சிறிநேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவம் செய்து தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.


இதேவேளை குறித்த கூட்டத்தில் யாழ்ப்பாணம் மற்றும் வன்னியில் போட்டியிட விரும்பி விண்ணப்பித்த பல கட்சி ஆதரவாளர்களின் விபரங்களும் ஆராயப்பட்டன. இருந்த போதிலும் அவர்களுக்கும் போட்டியிடுவதற்க்கு சந்தர்ப்பம் வழங்க முடியாத சூழலில் அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கொழும்பு மாவட்டத்தில் இம்முறை போட்டியிடுவதாக தமிழரசு கட்சி எடுத்த முடிவினை மாற்றியிருப்பதாகவும் அதற்காக தவராசாவின் பெயர் போனஸ் ஆசனப் பட்டியலில் முன்னுரிமைப்படுத்துவதாகவும் திருகோணமலையின் தற்போதைய நிலை கருதி அந்த மாவட்டத்திற்கும் ஓர் போனஸ் ஆசனம் வழங்க வேண்டும் எனவும் கட்சியின் தலைமையினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *