” இவர்கள் இருவரும் மக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் இருந்தும் தவறியுள்ளார்கள்..இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.இவ்வாறான சூழ்நிலைகளில் கடும் முயற்சிகளை மேற்கொண்டு எதனையாவது செய்திருக்கலாம்.
இந்த இரண்டு கௌரவ உறுப்பினர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் நியமன விடயங்கள் முன்னரே தெரிந்திருக்கும்.கடந்த முறை வழங்கப்பட்ட நியமனங்களிலும் நமது பட்டதாரிகள் பாதிக்கப்பட்டார்கள்.
ஆனால் இவர்கள் இருவரும் தமது பொறுப்புக் கூறலை சரியாக நிறைவேற்றவில்லை .இது சரியான அரசியல் முறைமை இல்லை.இவர்கள் கண்டிப்பாக மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
இப்படியான முயற்சிகளில் ஈடுபடாமல் வெறுமனே தனக்கு அதிகாரமில்லை என்று கூறுவதையும், மனித உரிமை ஆணைக் குழுவில் முறையிடுங்கள் என்று ஆலோசனைக் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது. இதுவொரு கையாலாகாத தனமாகும்.
இதே போன்று மாகாண சபை உறுப்பினர் தாஹிரும் கூட ஆளும் கட்சியில் இருந்துக் கொண்டு , புத்தளம் தொகுதி சுதந்திர கட்சி அமைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு வேடிக்கைப் பார்த்துள்ளார்.
இப்படி ஆளும் கட்சியிலும், ஆளும் கட்சியில் பங்காளியாக இருக்கிறோம் என்று கூறித் திரியும் தாஹிரும், நியாசும் தமது இயலாமைக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
நான் மாகாண சபையின் உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் இவ்வாறான நியமனங்களில் கண்ணும் கருத்துமாக இருந்து , வெளி மாகாண பட்டதாரிகளை புத்தளத்திற்கு நியமிக்க விடாது , பெருமளவிலான புத்தளம் படித்த சமூகத்திற்கு ஆசிரிய நியமனங்களைப்பெற்றுக் கொடுத்துள்ளேன்.
அத்தோடு இந்த நியமனத்தில் நடந்துள்ள குளறுபடிகளுக்கும் எப்படி ? எங்கே தவறு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து சகல நியமனமும் புத்தள பட்டதாரிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயல்வேன்.
பதவியில் இருப்பவர்களே பசப்பு வார்த்தைகளை கூறி நழுவும் நிலையிலும் , பதவியில்லாத நிலையிலும் நானும் நழுவிவிடவோ அங்கு முறையிடுங்கள் , இங்கு முறையிடுங்கள் என்று ஆலோசணை சொல்லவோ விரும்பவில்லை.