பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

‘வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் குறித்து விரைவில் கலந்துரையாடல்’

வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் மற்றும் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

மாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு இருப்பதாகவும், தேர்தலுக்கு எதிராக தென்னிலங்கையில் இனவாதப் போக்குடைய சிலர் கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்று இலங்கைக்கு, இந்தியா தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாணசபை முறைமையில் மாற்றத்தைக் கொண்டுவர அரசு யோசனை முன்வைத்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருடன் தான் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

21வயதான இளைஞனை கொலை செய்து குழியில் புதைத்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவு!

Editor

இலங்கை அரசாங்கத்தின் பலவீனமே தீர்மானத்திற்கு காரணம்.

wpengine

அடுத்த வருடத்தின் முதற் பகுதியிலேயே தேர்தலை நடாத்த முடியும் – பைஸர் முஸ்தபா

wpengine