பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வட மாகாண பாராளுமன்ற உறுப்பினரின் மகன் மீது தாக்குதல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் மூத்த மகன் மீது, இனந்தெரியாத 8 பேர் கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் வாள், கண்ணாடி போத்தல், இரும்புக் கம்பிகளுடன் நுழைந்த எண்மர், அவரது மகனின் மீது தாக்குதளை மேற்கொண்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளுக்கும் சேதம் விளைவித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts

மீள்குடியேற்ற அமைச்சராக ரிஷாத் பதியுதீன் செயற்பட்டார்! மட்டுமே நான் கூறினேன்

wpengine

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு வாகன விபத்துக்களால் 6பேர் உயிரிழப்பு

wpengine

றிசாத்தின் அரசியல் முன்மாதிரிகளைப் பின்பற்ற விரும்புகின்றேன். யாழ் உஸ்மானியாவில் அங்கஜன் (MP)

wpengine