பிரதான செய்திகள்

வட மாகாண பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் வடமாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஆரம்பிக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, காலை 07.30 மணிக்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு பிற்பகல் 01.30 மணிக்கு முடிவடையும் என வடமாகாண கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வட மாகாணத்தில் இயங்கும் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகள் அனைத்தையும் 2017.01.02 முதல் காலை 07.30 மணி தொடக்கம் பிற்பகல் 01.30 மணி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.625-0-560-320-160-600-053-800-668-160-90

Related posts

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

wpengine

மன்னார் வைத்தியத்துறையினரின் இனவாத ஓரங்கட்டலால் பாதிக்கப்படும் முசலி

wpengine

கல்முனை நகர மண்டபத்தை மீள ஒப்படைக்க மாத இறுதி வரை மட்டும் அவகாசம்; ஆணையாளர் அறிக்கை

wpengine