பிரதான செய்திகள்

வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வாழ்வாதார நிதியுதவி

வவுனியா, சிதம்பரபுரம், கற்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சி. சிவபாக்கியம். இவரது கணவர் நடக்கமுடியாமலும், கண் பார்வையற்றவராகவும் உள்ளார். அவருடைய இரண்டு பெண் பிள்ளைகளும் மாணவர்களாக உள்ளனர்.

இவர் சிதம்பரபுரம் வைத்தியசாலை முன்பாக சிறிய பெட்டிக்கடை வியாபாரம் செய்து குடும்பத்தை பேணி வருகிறார். தனது வியாபாரத்தை விரிவாக்கும் நோக்குடன் புளொட் அமைப்பின் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் மூலம் உதவி கோரியிருந்தார்.

இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட புளொட் அமைப்பின் லண்டன் கிளை உறுப்பினர் திரு. த. சிவபாலன் அவர்கள் ரூ 20000/- ஐ நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இப்பணம் நேற்று (23.06.2017) மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதனின் அலுவலகத்தில் வைத்து திருமதி. சி. சிவபாக்கியம் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் தேசிய அமைப்பாளர் திரு. த.யோகராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

கவனிப்பாரற்று இருந்த பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமனம் – சாணக்கியன் நடவடிக்கை

wpengine

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவதை தான் விரும்பவில்லை.

wpengine

20க்கு ஆதரவு! முன்னால் அமைச்சர்களான றிஷாட்,ஹக்கீம்,திகாம்பரம்

wpengine