வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனை ஆளுநராக நியமிக்க கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு மாகாண ஆளுநர் நியமனத்தில் சகல தரப்புகளும் முன்வைத்த பரிந்துரைகளைப் பரிசீலித்து பொருத்தமானவரை நியமிப்பேன் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பரிந்துரைப்பவரை பரிசீலிக்க முடியுமென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 29ம் திகதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வடக்கு மாகாண ஆளுநரையும் அழைத்து செல்வாரென தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.