Breaking
Mon. Nov 25th, 2024
அமைச்சு பதவியை பொறுப்பேற்குமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நிராகரித்துள்ளார்.

மேற்படி விடயம் குறித்து இன்றைய தினம் யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்த தெரிவித்த அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த 14ம் திகதிக்கு முன்னதாகவே முதலமைச்சர் என்னை அழைத்து அமைச்சு பொறுப்புக்களை ஏற்க முடியுமா என கேட்டி ருந்தார்.

அதன் பின்னரும் கேட்டார். ஆனால் அந்த கோரிக்கைக்கு நான் பதில் வழங்கியிருக்கிறேன். அதாவது நிராகரித்துள்ளேன்.

காரணம் நாம் ஏற்பது மற்றவர்களுக்கு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும், அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டு நாங்கள் 1 அல்லது 2 மாதம் என கொழும்பில் சென்று நிற்க இயலாது.

முதலமைச்சர் கேட்டதில் தவறில்லை. ஆனால் அவருக்கு நான் தெளிவாக கூறியுள்ளேன். முதலமைச்சர் கேட்கும் போதே நீங்கள் நாடாளுமன்றில் இருந்தவர்.

அதற்குமேல் வல்வெட்டிதுறை நகரசபை தலைவராக இருந்தவர், மேலும் எதையும் செய்ய கூடியவர். ஆகவே அமைச்சு பொறுப்பு ஒன்றை பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்றே கேட்டார். ஆனால் நான் அதனை மறுத்தேன்.

மேலும் இங்குள்ளவர்களை விட தென்னிலங்கை ஊடகங்கள் தினம் கேட்கிறார்கள். அவர்கள் பயப்படுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.

ஒருவேளை சிவாஜிலிங்கத்திற்கு அமைச்சு பதவி கிடைத்தில் பலம் கூடிவிடும் என நினைக்கிறார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *