பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை! எனக்கு அதிகாரம் இல்லை குணசீலன்

வடமாகாணத்தில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களை நியமிப்பதில் மாகாண அரசுக்கு அதிகாரங்கள் இல்லை என வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வைத்தியர் நியமனம் என்பது மத்திய அரசினால் செய்யப்படுகின்றது. மாகாண அமைச்சுக்கு அதிகாரங்கள் இல்லை.
மத்திய சுகாதார அமைச்சு வைத்தியர்களை நியமிக்கும் போது, வடமாகாணத்தில் எந்தெந்த வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் பற்றாக்குறைகள் உள்ளன மற்றும் எந்தெந்த வைத்தியசாலைகளுக்கு வைத்தியர் வெற்றிடம் உள்ளன என்றும் மத்திய சுகாதார அமைச்சுக்கு வட மாகான அமைச்சினால் அனுப்பி வைக்கின்றோம்.

அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய சுகாதார அமைச்சும், அகில இலங்கை வைத்தியர் சங்கமும் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.
அதாவது வருடாந்தம் வெளியேறுகின்ற வைத்தியர்கள் அவர்களின் புள்ளிகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டு, அவர்கள் தாங்கள் விரும்புகின்ற வைத்தியசாலைகளில் இணைகின்றனர்.

கூடுதலான புள்ளிகளைப் பெற்ற வைத்தியர்கள் உயர் வைத்தியசாலைகளில் இணைக்கின்றனர். ஏனைய வைத்தியர்கள் பின் தங்கிய வைத்தியசாலைகளில் கடமைகளைப்பொறுப்பேற்றுக்கொண்டு சேவைகளைச் செய்கின்றனர்.
இதில் பலர் அரசியல் செல்வாக்கு மற்றும் ஏனைய வழிகளிலும் மாற்றலாகி செல்கின்றனர்.

வடமாகாணத்தில் பின்தங்கிய வைத்தியசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்ற சில வைத்தியர்கள் வேலையை தாங்களாக இரத்துச்செய்து விட்டு வெளியேறுகின்றனர்.

இதனால் பின்தங்கிய சில வைத்தியசாலைகளுக்கு வைத்தியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றது.
மேலும், இந்த வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்று, நாடாளுமன்றத்திலும் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் தொடர்பில் அழுத்தத்தைப் பிரயோகித்து இரண்டு, மூன்று வருடங்களுக்குள் வைத்தியர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நவடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கவனயீர்ப்பு போராட்ட மக்களால் விரட்டப்பட்ட ஹுனைஸ் பாரூக் எதிர் பாருங்கள்……

wpengine

ஹக்கீம்,றிசாட் கீரைக்கடை அரசியல்

wpengine

ஆட்சியினை தீர்மானிப்பவர்களாக ரோஹிங்கிய முஸ்லிம்கள் இருந்தார்கள்! கண்டனம்

wpengine