பிரதான செய்திகள்

வட மாகாணத்திற்கு புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்.

வட மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட எச்.ஏ.ஏ சரத்குமார நேற்று  (வியாழக்கிழமை) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இன்றைய தினம் காங்கேசந்துறை பகுதியில் உள்ள வட மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் வைத்து சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் கடமையேற்றுக் கொண்டார்.

பொலிஸ் மரியாதை அணிவகுப்பை அடுத்து மங்கள விளக்கேற்றப்பட்டதன் பின்னர் சுப நேரத்தில் கையெழுத்திட்டு தனது கடமையை பொறுப்பேற்றார். இவரை வரவேற்பதற்காக வட பகுதியில் இருந்து பொலிஸ் உயரதிகாரிகள் பலர் வருகை தந்திருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் வட மாகாணத்திற்கான 5ஆவது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

இலங்கையில் இன்று சில பகுதிகளில் பெருநாள்

wpengine

“அடுத்த 5 ஆண்டுகளில் வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்கள்

wpengine

மட்டக்களப்பு இளம்பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

wpengine