பிரதான செய்திகள்

வட மத்திய மாகாண புதிய அமைச்சராக சுசில் குணரத்ன சத்தியப் பிரமாணம்

(அஸீம் கிலாப்தீன்)

வட மத்திய மாகாண சபையில் தான் வகித்து வந்த அமைச்சுப் பதவி உட்பட அனைத்துப் பொறுப்புக்களிலிருந்தும் இராஜினாமா செய்வதாக முன்னாள் வட மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்ஜித் தெரிவித்துள்ளார்.

வட மத்திய மாகாண சபையின் அமைச்சராகவிருந்த கே.எச். நந்தசேனவை அவரது அமைச்சுப் பதவியில் இருந்து முன்னறிவித்தல் இன்றி நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாகவே எஸ்.எம். ரஞ்ஜித் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். எஸ்.எம் ரஞ்சித் இன் ராஜினாமா காரணமாக ஏற்பட்ட பதவி வெற்றிடம் காரணமாக வட மத்திய மாகாண அமைச்சராக சுசில் குணரத்ன பதவிப் பிரமாணம்  செய்து  கொண்டார்.

 

Related posts

ஜனாதிபதி ரணில் விரைவில் வெளிநாட்டு பயணம்! கடன் தொடர்பில்

wpengine

வவுனியாவில் குழந்தை கடத்தல் பரபரப்பு சம்பவம்

wpengine

அமைச்சர் டக்ளஸ்சின் கவனத்திற்கு மன்னார்-கொக்குபடையான் மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine