பிரதான செய்திகள்

வட்டார தேர்தல் முறைதொடர்பாக வாக்காளர்களுக்கு தெளிவு கிடையாது

80 வீதமான வாக்காளர்களுக்கு புதிய தேர்தல் முறைமை பற்றி போதியளவு தெளிவு கிடையாது என முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் தெரிவித்துள்ளது.

சில வேட்பாளர்களுக்குக் கூட தேர்தல் முறைமை பற்றி தெளிவில்லை என பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி வரையில் இரண்டாண்டுகளாக உள்ளுராட்சி மன்ற சட்டம் காலத்திற்கு காலம் திருத்தி அமைக்கப்பட்டது.
இதனால் புதிய தேர்தல் முறைமை தொடர்பில் மக்கள் தெளிவு பெற்றுக்கொள்ளக்கூடிய கால அவகாசம் கிடைக்கவில்லை.

தேர்தல் முறைமை குறித்து செயலமர்வுகளை நடத்தும் போது பெரும்பான்மையான வாக்காளர்களுக்கு போதியளவு தெளிவில்லை என்பது தெரியவந்தது.
புதிய தேர்தல் முறைமை பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு அரசியல் கட்சிகள் போதியளவு சிரத்தை எடுத்துக்கொள்ளவில்லை.
தேர்தல் ஆணைக்குழு, பெபரல் போன்ற அமைப்புக்களே தேர்தல் முறைமை பற்றி மக்களை தெளிவுபடுத்தி வருகின்றன.

எனினும் வாக்களிப்பது மிகவும் சுலபமானது, தனக்கு விருப்பான கட்சியின் சின்னத்திற்கு எதிரே வாக்காளர்கள் புள்ளடி இடுதல் போதுமானது.
எனவே வாக்குகள் நிராகரிக்கப்படக்கூடிய சாத்தியங்கள் அபாயம் கிடையது என ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

கஞ்சா பொதி கடத்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் கூட்டமைப்பு அரசியல்வாதி

wpengine

அம்பிகையின் அறப்போர் தொடர்கின்றபோதும் பிரித்தானியா மௌனமாக இருப்பதால் வேதனை சிவசக்தி ஆனந்தன்

wpengine

இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

Editor