தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

வட்அப் சித்திரவதை! மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை

மலேசியாவில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பஞ்சாபின் பர்னாலா நகரத்தைச் சேர்ந்த 22 வயதான மானு என்கிற இளம்பெண், ஜனவரி 16 அன்று இரவு மலேசியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இரண்டு இளைஞர்கள் கொடுத்த தொடர் துன்புறுத்தலே அவருடைய தற்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் துன்புறுத்தலுக்கு பின்னரே அவர் மலேசியாவிற்கு சென்றிருக்கிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிலன் சிங் குகி மற்றும் அமன்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவரின் தாய் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இருவரின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

இரண்டு பேரும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனது மகளை துன்புறுத்தி வந்ததாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார். குகி மற்றும் சிங் அவளுக்கு மோசமான கருத்துக்களுடன், வீடியோக்களுடன் குறுஞ்செய்தி அனுப்புவார்கள் என கூறியுள்ளார்.

ஜூலை 2019 இல் தனது மகள் 181 ஹெல்ப்லைனை அழைத்ததாக தாய் கூறியுள்ளார். இந்த அழைப்பு சதர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது, இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

துன்புறுத்தலிலிருந்து தப்பிக்கும் முயற்சியில், இளம்பெண்ணின் பெற்றோர் அவரை மலேசியாவுக்கு அனுப்பியுள்ளனர். அங்கு அவர் ஒரு அழகுக்கலை படிப்பில் சேர்ந்தார்.

வெளிநாட்டிற்கு சென்ற பின்னரும் கூட, ஆபாச செய்திகளை அனுப்பியதுடன், மானுவின் பெற்றோரையும் அச்சுறுத்தி வந்துள்ளனர். மேலும், பணம் கேட்டு இளம்பெண்ணை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் நடைபெற்ற அன்று இரண்டு இளைஞர்களும் மானுவிற்கு வீடியோ கால் செய்துள்ளனர்.

அப்போது, இரண்டு பேராலும் தான் பெரும் மனவேதனை அடைந்துவிட்டதாக கூறி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதில் ஒரு இளைஞன் மட்டும் சம்பவத்தின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து, மலேசியாவில் உள்ள நிஷா என்ற நண்பருக்கு அனுப்பியுள்ளார். பின்னர் அவர் கொடுத்த புகாரின் பேரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

Related posts

சர்வதேச குழந்தை பருவ புற்றுநோய் தினம் இன்று : ஆண்டுதோறும் 400,000 குழந்தைகள் பாதிப்பு!

Maash

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் பணத்தை அச்சிட வேண்டும்

wpengine

இலங்கையில் போக்குவரத்து,உணவு பணவீக்கம் பல மடங்கு அதிகரிப்பு

wpengine