பிரதான செய்திகள்

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் பிரச்சினை! சீ.வி. விக்னேஸ்வரன் முற்றுகை

வடமாகாண வேலையில்லா பட்டதாரிகள் வடமாகாண சபைக்கு முன்னால் இன்று மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்கள்.

வடமாகாணசபை அமர்வுக்கு வருகைதந்த முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனையும் இதன்போது பட்டதாரிகள் சுற்றிவளைத்துள்ளனர்.

இதில் “72 நாட்களாக தாம் போராட்டம் நடத்தி வருவதாகவும் தமக்கு நிரந்தரநியமனம் வழங்கப்பட வேண்டும், கிழக்கு மாகாணத்தில் அந்த மாகாணமுதலமைச்சர் 4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நிலையில்வடமாகாண சபையினால் ஏன் வழங்க முடியாது?” என பட்டதாரிகள் வடமாகாண முதலமைச்சரை வழிமறித்துக் கேட்டுள்ளனர்.

 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர்,

“அண்மையில் ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பில் சுமார் 1174 பேருக்கு வேலை பெற்றுத்தருவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். ஜனாதிபதியுடம் மீண்டும் ஒரு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. குறித்த பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் உங்களுக்கு சாதகமான பதிலை தருகின்றேன். இது மாகாண அரசு அல்ல மத்திய அரசே உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதை பொருட்படுத்தாத பட்டதாரிகள் மீண்டும் கோசங்களை எழுப்பி அவரை வழிமறித்துள்ளனர்.

தொடர்ந்து வட மாகாணசபை அமர்வில் கலந்துகொள்ளாமல் முதலமைச்சர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

Related posts

மீண்டும் நலமுடன் களத்தில் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை!

wpengine

மாற்றுமத சகோதரர்களுக்கான குர்ஆன் அறிமுக நிகழ்வு (படம்)

wpengine

தலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் ? எங்கே பலயீனம் உள்ளது ? முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது ?

wpengine