Breaking
Mon. Nov 25th, 2024

கடந்த யுத்த கால இடம்பெயர்வுகளுக்கு பின்னர் வடமாகாண வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுடன் தமது தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வர்த்தகர்களின் அபிவிருத்தி தொடர்பாக 5 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அதிகார சபை ஒன்றினை உருவாக்கும் நோக்கோடு நேற்றைய தினம் 23.06.2016 அன்று வடமாகாண வர்த்தகர்களுடனான சந்திப்பு யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது இதில் வடமாகாண வர்த்தக வணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன், அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் வடமாகாண வர்த்தக சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்து கொள்ளவில்லை.

இக் கலந்துரையாடலில் மாவட்ட சங்கங்களின் செயற்ப்பாடு, கிளைச்சங்கங்களின் பதிவு, அதிகார சபைக்கான நியதிச்சட்ட உருவாக்கம், சிறுவார்த்தகர்களுகான கடனுதவிகள் போன்ற விடயங்கள் ஆராயப்பட்டன.

தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பாக மாவட்ட ரீதியான கலந்துரையாடல் ஓரிரு வாரங்களில் இடம்பெறும், இதற்கான அறிவித்தல்கள் வெகுவிரைவில் வர்த்தக சங்கங்களுக்கு வழங்கப்படும். அக் கூட்டங்களின் போது வர்த்தகர்கள் தமது கருத்துக்களை எழுத்து மூலம் சமர்பிக்கலாம் என’ அமைச்சர் அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.fc6aeab2-d47a-4ef5-9b1d-b599c7e96ebe1c028cb6-c726-4283-a653-2c76d1c143e7

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *