Breaking
Tue. Nov 26th, 2024

கனடாவில் குடியிருக்கும் இலங்கை தமிழர்கள் சிலர் இலங்கையில் நிதி குற்றவியல் புலனாய்வு அமைப்பில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

அதில் வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்த 50,000 கனடியன் டொலர் குறித்த சந்தேகத்தை எழுப்பியிருந்தனர்.

குறித்த தொகையானது வட மாகாண முதலமைச்சர் விக்னேஷ்வரன் பெயரில் அவரது ஆலோசகர் நிமலன் கார்திகேய ராசையா என்பவர் பெற்றுக்கொண்டதாகவும், ஆனால் இதுவரை குறித்த நிதியை பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் கனடிய சமுதாயக் கருத்துக்களம் என்ற அமைப்பானது கடந்த ஜனவரி மாதம் நிதி திரட்டும் வகையில் ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

டிக்கெட் விலையாக 500 மற்றும் 1000 டொலர்கள் வசூலித்துள்ளனர். இந்த விருந்து நிகழ்ச்சியால் சுமார் 113,500 கனடியன் டொலர் நிதியை திரட்டியுள்ளனர்.

குறித்த நிகழ்வின் செலவினங்கல் போக மீதி தொகையாக 50,150 கனடியன் டொலர் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் 50,000 கனடியன் டொலர் தொகையை வட மாகாணத்தில் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பில் பயன்படுத்த அளித்திருந்திருந்ததாக கூறப்படுகிறது.

கனடாவில் இருந்து முதலமைச்சர் விக்னேஷ்வரன் இலங்கை திரும்பியதும் நிதி பெற்றுக் கொண்டதற்கான ஆவணங்களை சமர்ப்பிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த நிதி தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் மற்றும் அவரது ஆலோசகர் நிமலன் ஆகியோர் மெளனம் சாதிப்பது பலருக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

(Tw)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *