செய்திகள்பிரதான செய்திகள்பிராந்திய செய்திமுல்லைத்தீவு

வடமாகாண மல்யுத்த போட்டியில் சாம்பியனான முல்லைத்தீவு..!

வடக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மாகாண மல்யுத்தப் போட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட உள்ளக விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்றன.

இப்போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் 15 தங்கப்பதக்கங்களை கைப்பற்றி, தொடர்ந்து 6 ஆவது ஆண்டாக முதலாவது இடத்தைப் பெற்றுள்ளனர். இது முல்லைத்தீவு மாவட்டத்தின் விளையாட்டுத் துறையில் பெரும் சாதனையாகக் கருதப்படுகின்றது.

இப்போட்டிகளில் ஆண்களுக்கான விளையாட்டில் முல்லைத்தீவு அணி 5 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. யாழ்ப்பாண மாவட்டம் 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கத்துடன் இரண்டாம் இடத்தையும், வவுனியா மாவட்டம் 2 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன.பெண்கள் பிரிவில், முல்லைத்தீவு பெண்கள் அணி 10 தங்கம் மற்றும் 1 வெள்ளி பதக்கங்களை வென்றது.

இந்த வெற்றிக்குப் பின்னால் பணி புரிந்துவரும் முல்லைத்தீவு மாவட்ட மல்யுத்த பயிற்றுனரும் வரலாற்று ஆசிரியருமான பி. ஜெயதர்சன் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் இளம் மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து சாதனைகளை நிலைநிறுத்தி வருவதால், எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலும் சாதிப்பார்கள் என எதிர்வு கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் ரஞ்சித்

wpengine

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine