Breaking
Tue. Nov 26th, 2024

வட மாகாணப் பொதுச்சேவை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் ஐவருக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இன்று வழங்கி வைத்துள்ளார்.

வட மாகாண ஆளுநரினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேர்முகத் தேர்வில் தோற்றிய 15 பேரில் ஐந்து பேர் நிர்வாக உறுப்பினர்களாக ஆணைக்குழுவிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்ளுக்கான நியமனக் கடிதங்களே வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

 

அந்த வகையில், ஓய்வு பெற்ற யாழ். மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் செல்லையா பத்மநாதன், வட மத்திய மாகாணத்தின் ஓய்வு நிலைக் கல்விப்பணிப்பாளர் எஸ்.எம்.கலகொட, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் சம்சுதின் லீலாவுதீன், ஓய்வுபெற்ற வடமாகாணப் பிரதம உள்ளக கணக்காய்வாளர் நாகமணி இராசநாயகம், ஓய்வு பெற்ற உதவி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கதிரவேலு இராசையா ஆகியோர் பொதுச்சேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

நியமனக்கடிதங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு ஆளுநர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், அக்கறை செலுத்திப் பணியாற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.

அனைத்து விடயங்களிலும் பொதுச்சேவைகள் ஆணைக்குழு காலம் தாழ்த்தாது செயற்பட வேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் திறம்படச் செயலாற்ற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *