பிரதான செய்திகள்

வடமாகாண பட்டதாரிகள் 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்

வட மாகாண பட்டதாரிகளிற்கான 111 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் கடந்த  வெள்ளிக்கிழமை வட மாகாண கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.

வட மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை பூத்திசெய்யும் வகையில், 111 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு வட மாகாண கல்வி அமைச்சில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ரீதியில் பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் குறித்த பட்டதாரிகள் நியமணம் வழங்கப்பட்டது. 1657496258Appoinment (1)

குறித்த ஆசிரியர்களுக்கான நியமனக் கடிதங்களை வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா வழங்கிவைத்தார்.

ஆசிரியர்களுக்கான நியமனம் பெறுவதில் கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டராக பணிபுரிந்த ஆசிரியர் ஒருவரும் மாற்றுவலுவுடைய பட்டதாரி ஒருவரும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிங்கள ஆசிரியர்களுக்கான நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் உதவிக்கல்வி பணிப்பாளர்கள் மாகாண கல்வி பணிப்பாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Related posts

சூழ்ச்சி செய்தவர்களின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடைக்கப்போவதில்லை

wpengine

மலேஷியாவில் மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – பிக்கு தாக்குதல்

wpengine

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine