பிரதான செய்திகள்

வடமாகாண ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்திசெய்யப்படும் – ரவீந்திரன்

வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய ஆயிரம்
பட்டதாரிகள் உள்வாங்கப்படுவார்கள் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்ர வீந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நேற்று சனிக்கிழமை கருத்து
தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினால் இந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் போதே வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரம்
இவ்வாறு குறிப்பிட்டார்.

Related posts

ஹக்கீம் தனது 17 வருட அரசியலில் சாணக்கிய அரசியலும்,சரணாகதி அரசியலும்

wpengine

20வது திருத்தம் சில திருத்தங்கள் சர்வஜன வாக்ககெடுப்பு தேவை! நீதி மன்றம்

wpengine

அமைச்சர் சம்பிக்கவின் தொலைபேசிகளை விசாரணைக்குட்படுத்த நீதிமன்றம் உத்தரவு

wpengine