பிரதான செய்திகள்

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட்

வடமாகாணத்தின் ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் புதிதாக நியமிக்கப்பட்ட 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

இதில் வடக்கு மாகாண ஆளுநராக கடமையாற்றிய ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம் மத்திய மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் வடமாகாண ஆளுநராக இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட பி.பீ.திசாநாயக்க, மத்திய மாகாண ஆளுநராகவும் ஊவா மாகாண பதில் ஆளுநராகவும் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

போலி அனுமதிப்பத்திரம்! உதய கம்மன்பில கைது

wpengine

கற்பிட்டியில் இருந்து சென்ற ஒருவர், கலா ஓயா ஆற்றில் சிக்கி பலி! யுவதி மாயம் .

Maash

வவுனியா இளைஞனைக் கடத்தி பணம் பரித்த யாழ். கும்பல்..!

Maash