பிரதான செய்திகள்

வடமராட்சி கிழக்கு பகுதியில் ஆயுதம் மீட்பு! இது எந்த தீவிரவாதிகளின் வேளை?

வடமராட்சி கிழக்கு – அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து நேற்று சனிக்கிழமை மாலை பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன் ஒருவா் அத்திவாரம் தோண்டியுள்ளார்.

இதன்போது அத்திவார குழிக்குள் இருந்து ஒரு பிளாஸ்டிக் பரல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிளாஸ்டிக் பரலை சோதித்தபோது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடா்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிளாஸ்டிக் பரலுக்குள் இருந்து பெருமளவு வெடிபொருட்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனா்.

Related posts

இலங்கையில் தங்கத்தின் விலை தொடராக அதிகரிப்பு

wpengine

வீதிகளில் குப்பைகளை கொட்டவேண்டாம் மன்னார் நகர சபை செயலாளர்

wpengine

சிலாவத்துறை குடிநீர் திட்டத்தை திறந்து வைத்த பிரதேச செயலாளர்

wpengine