கட்டுரைகள்பிரதான செய்திகள்

வடக்கு முஸ்லிம்களை அழிக்க ஹக்கீம் அமைச்சர் சம்மந்தன் உடன் கைகோர்ப்பு

(ஜெமீல் அஹம்மட்)

அன்று பிரபாகரனோடு கைகோர்த்து வடமாகாண முஸ்லிம்களை அழித்த ஹக்கீம் தற்போது இரா.சம்மந்தன் ஐயாவுடன் கைகோர்த்து கிழக்கு முஸ்லிம்களை அழிக்க திட்டங்களை ஹக்கீம் போடுகிறார் முஸ்லிம்கள் ஹக்கீமின் அரசியல் நகர்வுகளில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களால் சமுதாயத்துக்காக உருவாக்கபட்ட கட்சி இன்று ஒரு சிலரின் குடும்ப கௌரவத்தை பாதுகாக்கும் கட்சியாக மாறியுள்ளது. அதில் இருப்பவர்கள் அதிகமானோர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல பதவி பணத்துக்காக வந்து குடியேறியவர்கள் அதில் தற்போது தலைமை என்று சொல்லி தலைக்கணம் பிடித்து இருக்கும் ஹக்கிமும் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் போராளி என்று கூற முடியாது.

அஸ்ரப் மரணித்த உடன் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் மரணித்து விட்டது தற்போது அந்த கட்சியில் முஸ்லிம் என்ற சொல்லை வைத்து அரசியல் வியாபாரம் அழகாக செய்கிறார் ஹக்கீம் அதனால் எமது சமுகத்துக்கு எந்த நன்மையும் இல்லை.

13178811_1279987235363588_7086894031133101225_n

கிழக்கு மாகாண அதிகாரம் மாவட்ட அதிகாரம் என்று வைத்து கொண்டு மக்களுக்கு எந்த சேவையும் செய்யாமல் மக்களை ஏமாற்றும் அரசியலை ஹக்கீமும் அவரது சகாக்களும் செய்து வருகின்றனர் அதனால் சமுதாயத்தை விலை பேசும் தலைமையும் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும் முஸ்லிம் சமுகத்துக்கு தேவையா?  என்று சிந்தித்தால் பலரும் இல்லை என்ற கருத்தை தான் கூறுகின்றனர்.

எனவே எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் என்று வாக்கு கேட்டு வரும் வியாபாரிகள் கொந்தராத்து முதலாளிகள் கொமிஷன் கோடிஸ்வரர்கள் போன்றவர்கனை விரட்டினால் மட்டுமே இலங்கையில் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியும்

Related posts

மதுபானத்திற்கு பணம் 5 நாள் குழந்தையை விற்பனை

wpengine

பெண்களை கௌரவிக்க ஷிரந்தியை விட சிறந்த விருந்தினரை பெண் வழக்கறிஞர்கள் சங்கம் கண்டுபிடிக்க முடியவில்லையா?

wpengine

காதலி பார்க்கும் போதே! காதலன் தற்கொலை (விடியோ)

wpengine